ராட்சசன் படத்திற்கு வெளிநாட்டில் கிடைத்த அங்கீகாரம்

விஷ்ணு விஷால் நடிப்பில் ராம் குமார் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளிவந்த படம் தான் ராட்சசன்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். மேலும், ராட்சசன் படத்திற்கு பாதி வெற்றியை கொடுத்தது இசை என்று கூட சொல்லலாம்.

இந்நிலையில், ராட்சசன் படத்திற்கு Fusion International Flim Festival என்ற விருது வழங்கும் விழாவில் Best Original Score, என்ற விருது கிடைத்துள்ளது. இதனை புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

மேலும், இந்த விழா ஐரோப்பா நாட்டில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.