வடமாகாணத்தை சேர்ந்த ஆர்ஷிகா வீராங்கணை தெற்காசிய பளுதூக்கலில் வெள்ளிப்பதக்கம் வென்றார்!

13வது தெற்காசிய விளையாட்டு விழாவில் பளு தூக்கல் போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

நோபாள தலைநகர் காத்மண்டுவில் நடந்து வரும் தெற்காசிய போட்டிகளில், 64 கிலோ எடைப்பிரிவில் போட்டியில் பங்கேற்ற ஆர்ஷிகா, வெள்ளிப்பதக்கத்தை வென்றதுடன், இலங்கை சாதனையையும் புதுப்பித்தார்.