சமீப நாட்களாக உலக ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த 3 தமிழர்கள்..!

உலகத்தில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினந்தோறும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. பல சாதனைகளும் அரங்கேறி வருகின்றன.

அவற்றில் ஒரு சில வகைகள் மட்டுமே சமுக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

அப்படி கடந்த வாரத்தில் மட்டும் உலக செய்திகளில் மூன்று தமிழர்கள் ட்ரெண்டாகி வந்தனர். அதில் முதல் இடத்தில் மதுரையில் பிறந்த 47வயதான சுந்தர்பிச்சை இடம்பெற்றுள்ளார்.

இவர் உலக தொழில்நுட்பத்தை இணைக்கும் நிறுவனமான் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

மேலும், இவரின் வளர்ச்சியால் கூகுள் நிறுவனம் அசாத்திய வளர்ச்சியை கண்டதால், அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்திற்கும், மேலும் 8 நிறுவனங்களுக்கும் தலைமை அதிகரியாக தற்போது நியமிகப்பட்டுள்ளார்.

அடுத்தப்படியாக அனைவரும் அறிந்த சுவாமி நித்யானந்தா திருவண்ணாமலையில் பிறந்து உலக ட்ரெண்டிங்கில் தற்போது இடம்பெற்றார்.

பல சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தாவை, சில நாட்களாக கைலாசா என்ற தனி நாடு குறித்து அதிகம் பேசப்பட்டுள்ளார்.

கடைசியாக காணாமல் போன விக்ரம் லேண்டரை கண்டுப்பிடித்த மதுரையில் பிறந்து, சென்னையில் என்ஜினீயராக உள்ள சண்முக சுப்பரமணியன் நாசாவே பாராட்டியதில் ஒரே நாளில் உலக ட்ரெண்டிங் ஆனார்.