இன்றையதினம் பரீட்சை எழுதும் மாணவன் மண்சரிவால் குடும்பத்துடன் உயிழப்பு -நுவரெலியா சம்பவம்!!!

நுவரெலியா மலபத்தவ பகுதியில் 30ம் திகதி இரவு 7.30மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்குண்டு நான்கு பேரில் மூன்று பேரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக வலப்பனை  பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் மற்றுமொரு நபரை தேடும் நடவடிக்கையில் இரானுவத்தினர் ஈடுபடுத்தபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நுவரெலியா பதியபெலெல்ல மலபத்தவபிரதேசத்தில் வீடொன்றின் மீது 30ம் திகதி இரவு மண்மேடு சரிந்து விழுந்தமையினாலே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு நுவரெலியாவில் இருந்து மேஜர் அசித்தரனதிலக்க தலைமயில் இராணுவப்படை வரவலைக்கபட்டு தேடும் நடவடிக்கையினை மேற்கொண்ட போது கணவன் மனைவி மற்றும் பேரபிள்ளையின் ஆகிய மூன்று சடலங்கள் மீட்கபட்டுள்ளதாகவும் நாலைய தினம் இடம்பெறவிருக்கின்ற கல்வி பொதுதாரதர சாதாரண தர பரீட்சையில் தோற்ற உள்ள பேரனை தேடு பணியில் தொடர்ந்தும் இரானுவத்தினர் ஈடுபடுத்தபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதேவேலை சம்பவ இடத்திற்கு புகையிரத அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோகன புஸ்பகுமார ஆகிய சென்று நிலமையை
கண்டறிந்தனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது