அஜித்தின் ‘ஆலுமா டோலுமா’ பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட பிரபலம்..!!

டோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பாலகிருஷ்ணா. இவரது நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தை பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். ‘ரூலர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் பாலகிருஷ்ணா போலீசாக நடிக்கிறாராம்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. சமீபத்தில், வெளியான படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் செம லைக்ஸ் குவித்து வருகிறது. படம் வருகிற டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில், பாலகிருஷ்ணா ‘வேதாளம்’ படத்தின் ‘ஆலுமா டோலுமா’ பாடலுக்கு நடனமாடும் ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.