ரஜினி கமலுடன் டி.ராஜேந்தரும் கை கோர்ப்பா.?

முன்னதாக நடிகர் கமல் மற்றும் ரஜினி ஆகியோர் இணைந்து அரசியல் களம் காண தயார் என இருவரும் தனித்தனியே அறிவித்துள்ளனர். இருப்பினும், ரஜினி ரசிகர்களுக்கு இது பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. நடிகர் ரஜினி காந்த் “மிகப்பெரிய அதிசயத்தையும்,, அற்புதத்தையும்  தமிழக மக்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் அரசியலில் நிகழ்த்தி காட்டுவார்கள்.” என்று அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும், இயக்குனருமான டி. ராஜேந்தர் “அரசியலில் வெற்றி பெற வெறும் அனுபவம் மட்டும் போதாது. இது அனைத்தையும் தாண்டி அதற்கு அதிர்ஷ்டம் மிக முக்கியம்.

அரசியலில் ரஜினி, கமலை விட நான்தான் சீனியர். இதை காரணமாக வைத்து கொண்டு ரஜினி, கமல் பற்றி நான் எதுவும் கூற போவதில்லை. அப்படி நான் சொன்னால் மட்டும் யார் கேட்பார்கள்.?” என்று பேசியுள்ளார்.

தன்னுடைய வித்தியாசமான கதைக்களத்தின் காரணமாக பல வெற்றி படங்களை எடுத்து கொடிகட்டி பறந்தவர் டி.ராஜேந்தர். 1996ல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் பதவிவகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அவர் தனிக்கட்சி துவங்கியது கைகொடுக்கவில்லை.

இந்நிலையில், ரஜினி, கமலுக்கு முன்னபாகவே அரசியல் களம் கண்ட டி.ராஜேந்திரன் தன்னுடைய பேட்டி ஒன்றில் தான் முதல்வர் ஆக கட்சியைத் துவங்கவில்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் ரஜினி, கமலுடன் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.