மது போதையில், மனைவியை சீண்டிய கணவன்.! நடந்தது என்ன ??

திருப்பூர் மாவட்டம் அருகே கணவனை அடித்து கொலை செய்துவிட்டு, வாகன விபத்தில் உயிரிழந்ததாக கூறிய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் பல்லடம் அருகே மீனாட்சி நகரை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 17ஆம் தேதி படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து அவருடைய மனைவியிடம் விசாரித்ததில் இருசக்கர வாகனத்திலிருந்து அவர் தலையில் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டதால், தலையில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறை விசாரித்து வந்தது. பிரேத பரிசோதனையின் முடிவில் வெங்கடேசன் தலையில் பலமாக அடிபட்டு இறந்தது தெரியவந்துள்ளது.

எனவே அவருடைய மனைவி உமா தேவியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் சம்பவ தினத்தன்று மது அருந்திவிட்டு வெங்கடேசன் தன்னுடைய மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த அவருடைய மனைவி உமா தேவி, உருட்டு கட்டையை எடுத்து அவருடைய தலையில் பலமாக தாக்கியுள்ளார், இதன் காரணமாகவே அவர் உயிர் இழந்துள்ளது தெரியவந்துள்ளது.