புது கட்டிடத்தில், வட்டமிட்ட திமுக வட்ட செயலாளர்.!

சென்னை தேனாம்பேட்டை போயஸ் கார்டன் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், கட்டிடம் கட்டும் தொழில் செய்து வருகின்றார். இவர் தேனாம்பேட்டையில் புதிதாக ஒரு கட்டிடம் கட்ட முடிவு செய்து, அதற்கான பணியை தொடங்கி இருக்கிறார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த திமுக வட்ட செயலாளர் சாமுவேல் என்பவர் அந்த இடத்திற்கே நான்தான் தாதா என சொல்லிக்கொண்டு சுற்றி திரிந்து உள்ளார். ரவிச்சந்திரன் கட்டிக்கொண்டிருக்கும் கட்டிடத்திற்கு சாமிவேல் அவருடைய நண்பர் இருவருடன் சேர்ந்து வந்துள்ளார்.

அங்கே வேலை பார்த்துக்கொண்டு இருந்த சூப்பர்வைசர் ரகுபதி மற்றும் சக ஊழியர்களிடம் இது எங்களுடைய ஏரியா, எங்கள் அனுமதி இல்லாமல் யாரும் இங்கே பில்டிங் கட்டக்கூடாது என்று கூறி மாமுல் கேட்டு மிரட்டி இருக்கின்றார்.

மேலும் அவருடன் வந்த நண்பர்கள் சூப்பர்வைசர் ரகுபதியை அடித்து இருக்கின்றனர். இதுகுறித்து ராமச்சந்திரன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் திமுக வட்ட செயலாளர் சாமிவேலை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர். மேலும், அவருடன் இணைந்து தகராறு செய்த இரண்டு பேரும் தப்பி ஓடியதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.