சதீஷின் மனைவியின் ஒளிப்படம்..!!!

நகைச்சுவை நடிகர் சதீஷ் சிக்ஸர் பட இயக்குநரின் தங்கையை திருமணம் செய்யவுள்ளார்.

இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த சதீஷ் தற்போது காதல் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

சிக்ஸர் பட இயக்குநர் சச்சுவின் தங்கையைதான் அவர் மணக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 6ஆம் திகதி நடைபெறவுள்ள திருமணத்திற்காக சதீஷ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தையும் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

அந்த ஒளிப்படங்களை அவருடைய ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.