குழந்தை இறந்து 2 மணிநேரம் ஆனது கூட தெரியாமல் தாய் செய்த காரியம்..!!

சென்னையில் தாம்பரம் அருகில் உள்ள சேலையூரில் வாழ்ந்து வருபவர் சக்தி முருகன். இவரது மனைவி கீதா, சக்தி முருகனுக்கும், கீதாவுக்கும் ரித்தீஷ் என்னும் 6 மாத குழந்தை இருக்கிறது. இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள்.

கீதாவால் தனி ஆளாக, ஆறு மாத கைக்குழந்தையை பார்த்துக் கொள்ள முடியாது என்பதற்காக கீதாவின் தாய் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். சிறிது காலம் அங்கேயே தங்கி கீதாவையும், குழந்தையையும் கவனமாக பார்த்து கொண்டு இருந்தார். பின்பு ஆஸ்திரேலியாவில் விடுமுறை காலம் துவங்கியதால் கீதாவும், அவர் தாயாரும் சென்னைக்கு கிளம்பினார்கள்.

விமானம் சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவு ஒரு மணிக்கு வந்தடைந்தது. வழக்கமாக விமான நிலையத்தில் நடைபெறும் சோதனைக்காக இருவரும் காத்திருந்தனர். அப்போது குழந்தை ரித்தீஸ் எந்தவித அசைவும் இன்றி பேச்சு மூச்சற்று இருப்பதை கவனித்த கீதா அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு குழந்தையை விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில், மருத்துவர்கள் பரிசோதித்து பின் அவர், இறந்து இரண்டு மணி நேரம் ஆனது என்று தெரிவித்தார்கள். இதை தொடர்ந்து குழந்தையின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் விமான நிலையத்தில் இருந்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.