கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பிரபல பாடகி

மராத்தி மொழிகளில் அதிக பாடல்கள் பாடி பிரபலமானவர் கீதா மலி.

இவர் தன்னுடைய கணவருடன் வெளிநாட்டில் சுற்றுலா சென்றுவிட்டு அண்மையில் தான் மும்பை வந்தார். அங்கு வந்த புகைப்படங்களையும் அவர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார்.

மும்பையில் இருந்து அவர் தன்னுடைய சொந்த ஊரான நாஷிக் செல்ல காரில் கணவருடன் பயணித்துள்ளார்.

அப்போது அதிகாலை 3 மணியளவில் லகே பாட்டா என்ற இடத்தில் அவரது கார் கன்டெயினர் லாரியில் வேகமாக மோதியுள்ளது.

இதில் அடிபட்ட கீதா மற்றும் அவரது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கீதா சிகிச்சை அளிக்கும் போதே உயிரிழக்க அவரது கணவர் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.