வீரர்களுக்கு சிறந்த உதாரணமாக திகழ்பவர் கோலி..!

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் முன்னாள் கிரிக்கெட் நடுவர் சிமோன் டஃபேல் (48) இவர் தனது வாழ்க்கை அனுபவங்களை தொகுத்து, “ஃபில்லிங் கேம் என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

இது தொடர்பான, விற்பனைவிழா சென்னை தனியார் சந்தை மாளிகையில் நடைபெற்றது. டஃபேல் முறை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த நடுவர்’ விருதை பெற்ற பெருமையை கொண்டவர்.

2009ம் ஆண்டு லாகூரில் பாகிஸ்தான்-இலங்கை போட்டிக்கு முன்பாக நடைபெற்ற குண்டு வெடிப்பின் போது மயிரிழையில் தப்பித்தவர். குண்டு வெடிப்பில் தப்பியது உட்பட பல்வேறு அணுபவங்களை புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.

டஃபேல் செய்தியாளர்களிடம் பேசும் போது, ‘ நடுவர் போன்ற பொறுப்பான பணி, மன நிறைவை மட்டுமல்ல ஏராளமான அனுபவங்களையும் தந்தது. விமர்சனங்களையும் எதிர் நோக்கினேன்.

சரியான முடிவுகளை எடுக்க வசதியாக, நல்ல தொழில் நுட்பங்களை கையாள நடுவர்களை ஊக்கவிக்க வேண்டும். நமது முயற்சிகள், அனுபவங்கள்டன் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது எப்போது சரியாக இருக்கும்.

வீரராக இருந்தாலும், யாராக இருந்தாலும் நீங்கள் நீங்களாகவே இருங்கள். யாரை போன்றும் மாற முயற்சிக்காதீர்கள். ஆனால் அவர்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு உங்கள் பாணியை கடைபிடியுங்கள்.

அப்படி சிறந்த வீரராக மட்டுமல்லாமல் தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள மற்ற வீரர்களுக்கு விராட் கோலி சிறந்த உதாரணமாக திகழ்கிறார். பகல் இரவு போட்டியாக டெஸ்ட் போட்டிகளை நடத்துவது வண்ணப் பந்துகளை பயன்படுத்துவதில் சவால்கள் இருக்கவே செய்யும். ஆனால் டெஸ்ட் போட்டிகளை, அதில் விளையாடும் வீரர்களை மக்களிடையே பிரபல படுத்துவது அவசியம்’ என்றார்.