இன்றைய ராசிபலன் (05.11.2019)

ஸ்ரீ விகாரி ஆண்டு – ஐப்பசி 19 – செவ்வாய்கிழமை (05.11.2019)
நட்சத்திரம்: திருவோணம் காலை 6.40 வரை பின்னர் அவிட்டம்
திதி : அஷ்டமி காலை 7.54 வரை பின்னர் நவமி
யோகம் : சித்த யோகம்
நல்லநேரம் : காலை 7.45 – 8.4500 / மாலை 4.45 – 5.45

செவ்வாய்க்கிழமை – சுப ஓரை விவரங்கள்
(காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8

மேஷ ராசி
மேஷ ராசி நேயர்களே, குடும்ப நபர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். எதிரிகளின் பலம் குறையும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

ரிஷப ராசி
ரிஷப ராசி நேயர்களே, புதிய திட்டங்கள் நிறைவேறும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியில் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.

மிதுன ராசி
மிதுன ராசி நேயர்களே, நீண்டநாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு உண்டு.

கடக ராசி
கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். நண்பர்களுக்கு பண உதவி செய்ய நேரிடும். பெண்களால் ஆதாயம் உண்டு. தொழில், வியபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.

சிம்ம ராசி
சிம்ம ராசி நேயர்களே, மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். முன் கோபத்தால் உறவினர்களிடம் பகை உண்டாகும். திருமண முயற்சிகள் கைகூடும். உத்யோகம் மாற்றம் ஏற்படும்.

கன்னி ராசி
கன்னி ராசி நேயர்களே, சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. புது வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். உணவில் கவனமும், சீரான ஓய்வும் ஆரோக்கியம் தரும். தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும்.

துலாம் ராசி
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வெளிநாட்டு யோகம் உண்டு. பொருளாதார நிலை சீரான வளர்ச்சி காணும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரிய வரும்.

விருச்சிக ராசி
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தவும். தன வரவு கூடும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

தனுசு ராசி
தனுசு ராசி நேயர்களே, ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்கவும். தள்ளி போன காரியங்கள் உடனே முடியும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மகர ராசி
மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உயரும். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். வாகன வசதிகள் பெருகும். தொழில், வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.

கும்ப ராசி
கும்ப ராசி நேயர்களே, புதிய நபர்களின் சிநேகிதம் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும்.

மீன ராசி
மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் சுபகாரியங்கள் கை கூடி வரும். ஆன்மீகப்பெரியோரின் அருள் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும்