இந்திய கேப்டன் கோலியின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

இந்தியாவுடைய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பதவியேற்றுள்ள சவுரவ் கங்குலி., நேற்று கொல்கத்தாவில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சமயத்தில்.,

நாங்கள் இரவு – பகல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது குறித்து சிந்தித்துக்கொண்டு இருக்கிறோம்.. இதற்கான நடவடிக்கைகளை நாங்கள் விரைவில் துவங்கவுள்ளோம்.

இந்த பகல் – இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இந்திய கேப்டனான விராட் கோலி ஒத்துழைத்துள்ளார் என்பதையும் நான் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த போட்டியில் பங்கேற்க கோலிக்கு விருப்பமில்லை என்ற தகவல் வெளியானது பொய்யான கூற்றாகும். இந்த போட்டியிலும் விராட் கோலி விளையாட ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில்., அனைத்தும் எளிதாகிவிடும்.

இந்திய அணியினை முன்னெடுத்து செல்வதற்கு இதனைப்போன்ற போட்டிகள் அவசியமும் கூட… இது கட்டாயம் நடைபெறும். விரைவில் போட்டி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார். மேலும்., இந்தியாவை பொறுத்த வரையில் பகல் – இரவு போட்டிகள் நடைபெறவும் இல்லை., பிற நாடுகளில் நடக்கும் போட்டியில் இந்தியா பங்குகொண்டதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.