பொலிஸ் நிலையம் சென்ற இருதயமேரி காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் தெரிவித்தார் – அவர் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்…

கடந்த 26 ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் சென்ற தனது மனைவி இருதயமேரி காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் மனோ கிரிதரன் தெரிவித்துள்ளார்.

காணி தொடர்பான விசாரணைக்காக மட்டக்களப்பு காட்டு கந்தோர் பொலிஸ் நிலையம் சென்ற நிலையிலேயேதனது மனைவி அங்கிருந்து காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் காணாமல் போயுள்ளதாகவும் அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது மனைவி காணாமல் போனமை ஒரு திட்டமிட்ட கடத்தல் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் தனக்கு அறியத்தருமாறும், தன்மனைவியை கண்டுபிடிக்க உதவுமாறும் அவர் சமூகவலைதளமூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

சகாயமேரி பற்றி தெரிந்தவர்கள் குறித்த் இலக்கத்தில் 0765804116 தொடர்புகொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.