பெட்ரோமாக்ஸ் படத்தின் விமர்சனம்

நடிகர்கள்: தமன்னா, சத்யன், யோகிபாபு, காளி வெங்கட், டீ எஸ் கே, முனீஷ் காந்த்
இயக்கம்: ரோஹின் வெங்கடேசன்
இசை: ஜிப்ரான்

காமெடி கலந்த பேய் படமாக உருவாகி உள்ளது பெட்ரோமாக்ஸ். இப்படத்தில், தமன்னாவுடன் இணைந்து சத்யன், முனீஷ்காந்த், மைம் கோபி, லிவிங்ஸ்டன், பிரேம், காளி வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த படம் பேய் படம் என்பதால் திரையரங்கில் அதிகமான குழந்தைகளை காண முடிந்தது.

முன்பெல்லாம் இவ்வாறு கிடையாது காஞ்சனா சீரிஸ் பிறகே தமிழ்நாட்டில் பேய் படங்களுக்கு குழந்தைகள் அதிகம் திரையரங்கிற்கு வருகின்றனர். நயன்தாரா சமீபகாலமாக ஹீரோ அல்லாத ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து வருகிறார் அதே போல் தற்போது தமன்னாவும் தனிபெரும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமன்னா நல்ல குணசித்திர கதாபாத்திரத்தில் கல்லூரி படத்தின் மூலம் அறிமுகமானார் அதற்கு பிறகு பெரிய ஹீரோக்களுடன் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து கமர்சியல் நாயகியாக வலம் வந்த தமன்னாவுக்கு தர்மதுரை படம் மீண்டும் நடிகை தமன்னாவை மீட்டு எடுத்து தந்தது. அதற்கு பின் தர்மதுரை இயக்கிய சீனு ராமசாமியே மீண்டும் தமன்னாவை வைத்து கண்ணே கலைமானே படத்தை இயக்கி இருந்தார் அந்த படமும் எந்த வித கமர்சியல் தன்மையும் இன்றி தமன்னாவின் நடிப்பிற்கு தீனி போட்டது. அதற்கு பின் தற்போது ஹீரோ இல்லாமல் சோலோவாக பெட்ரோமாக்ஸ் படத்தில் நடித்துள்ளார்.

பெட்ரோமாக்ஸ் அனந்தோ பிரம்மா பட ரீமேக் என்பதனால் நாம் அந்த படத்தை இந்த படத்துடன் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியாது . அவ்வாறு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பல இடங்களில் ஸ்கோர் செய்து இருக்கிறது பெட்ரோமாக்ஸ். பெட்ரோமாக்ஸ் படத்தில் தெலுங்கை போலவே பல இடங்களில் தமிழிலும் காமெடி சீன்கள் சரியாக வந்துள்ளது.

தற்போது முன்னணி காமெடியனாக உருவாகி உள்ள யோகி பாபுவின் காமெடியும் இந்த படத்தில் நன்றாக உள்ளது . இந்த படம் பேய் படம் என்பதால் திரையரங்கில் அதிகமான குழந்தைகளை காண முடிந்தது. முன்பெல்லாம் இவ்வாறு கிடையாது காஞ்சனா சீரிஸ் பிறகே தமிழ்நாட்டில் பேய் படங்களுக்கு குழந்தைகள் அதிகம் திரையரங்கிற்கு வருகின்றனர். ஒரு பக்கம் அருவம் என்ற படம் இதே தேதியில் ரிலீஸ் ஆகி இருக்கிறது . அதுவம் திகில் நிறைந்த பேய் படமாக இருப்பதால் – திகில் பட வாரம் என்றே சொல்லலாம் . யார் இந்த போட்டியில் வெல்ல போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

லிவிங்ஸ்டன் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் அவர் பங்கை சரியாக செய்து கொடுத்துள்ளார். இந்த படம் எப்படியாவது ஓடியாக வேண்டும் என்று தம்மன்னா ப்ரோமோஷனல் வேலைகளுக்கு பெரிதும் உதவி செய்திருக்கிறார். இயக்குனரின் சாமர்த்தியம் – நடிகர் விஜய் பேசிய டைலாக் வைத்த ட்ரைலர் செய்து ட்ரெண்டிங் ஆகியது தான்.

ஒரு வீட்டுக்குள் மட்டுமே வைத்து நீண்ட நேரம் காட்சிகள் அமைப்பது என்பது ஒரு கடினமான வேலைதான் இருந்தாலும் சலிப்பு தட்டாமல் நல்ல framing பிரேமிங் சென்சுடன் எடுத்திருப்பது இயக்குனரையும் ஒளிப்பதிவாளரையும் பாராட்ட வைக்கிறது.

தானாக கதவு திறப்பது , ஜன்னல் சாத்திக்கொள்வது போன்ற காட்சிகள் பல பல பேய் படங்களில் வந்து அலுப்பு தட்டி விடிகிறது அதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம். பேய் , ஆவி போன்ற விஷயங்களை வைத்தால் வித்தியாசமாக ஆனந்த புரத்து வீடு என்று நந்தா நடிப்பில் இயக்குனர் நாகா இயக்கி இருப்பார். அந்த படத்தில் வரும் மேக்கிங் ஸ்டைல் பெட்ரோமாஸ் படத்திலும் வேறு விதமாக காட்டி உள்ளார்கள்.

இந்த படத்துக்கு மிக பெரிய பலம் , காட்சிகளை தூக்கி நிறுத்தும் பாக் கிரௌண்ட் ஸ்கோரிங் தான். ஜிப்ரான் பட்டய கிளப்பி இருக்கிறார். கண்டிப்பாக இப்படி ஒரு பின்னணி இசை இல்லை என்றால் இந்த படத்தில் உள்ள திகில் சுவாரஸ்யம் குறைந்து விடும். அவருக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட் போடலாம்.

சினிமா பேய் , காது கேட்காத பேய் , குடிகார பேய் , எமோஷனல் பேய் என்று அவரவர் கதாபாத்திரங்களை செவ்வெனே செய்து இருக்கிறார்கள். சத்யன் , முனீஷ்காந்த் நல்ல நடிகர்கள் தமிழ் சினிமா இவர்களை இன்னும் நன்றாக பயன் படுத்த வேண்டும். காமெடியுடன் வரும் பேய் கதைகள் வந்துகொண்டே தான் இருக்கிறது – அதில் இதுவும் ஒன்று என்று விட்டு விடாமல் தியேட்டர் சென்று பார்த்து ரசிக்கலாம்.

கவுண்டமணி சொல்லுவது போல் – பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா ? என்றால் ஆம் என்று சொல்லி நகைச்சுவையுடன் ஒரு நல்ல திகில் படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.

மொத்தத்தில் பெட்ரோமாக்ஸ் கொஞ்சம் கலெக்ஷன் பாக்ஸ் .