பிகில் படத்தை தொடர்ந்து தெலுங்கு நடிகருடன் அட்லீ கூட்டணி?

இயக்குனர் அட்லீ தற்போது பிகில் படத்தில் பிசியாக உள்ளார். படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் நிலையில் அடுத்து அவர் ஒரு முன்னணி தெலுங்கு ஹீரோவை வைத்து படம் இயக்குகிறார் என செய்திகள் சமீபத்தில் பரவியது.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் அட்லீ ஹாலிவுட் நடிகர் பில் டியூக் உடன் பேசியுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் அவர்கள் அடுத்து ஒன்றாக கூட்டணி சேர்கிறார்களோ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“உங்கள் ஈமெயில் ஐடி அனுப்புங்கள். எங்கள் டீம் தொடர்பு கொள்ளும் ஹாலிவுட் வரும்போது லஞ்ச் சாப்பிட வாருங்கள்” என பில் டியுக் அழைத்துள்ளார்.