பப்பி படத்தின் விமர்சனம்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் ஐசரி கணேஷ். இவர் தயாரிப்பில் தொடர்ந்து எல்.கே.ஜி, கோமாளி ஆகிய படங்கள் செம்ம வரவேற்பு பெற்றது, இதை தொடர்ந்து தற்போது பப்பி படம் திரைக்கு வந்துள்ளது, இதுவும் வரவேற்பு பெற்றதா? பார்ப்போம்.

கதைக்களம்

வருண் வாழ்க்கையில் எப்படியாவது கன்னி கலைய வேண்டும் என்று இருக்கும் ஒரு கல்லூரி மாணவன். இவர் வீட்டு மாடியிலேயே சம்யுக்தா குடி வருகின்றார்.

அவரின் முதல் சந்திப்பிலேயே காதல் வர, அவருடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றார், அப்போது இருவரும் தனிமையில் இருக்கும் போது எல்லை மீறுகின்றனர்.

இதன் பிறகு சம்யுக்தா கர்ப்பமா என்று டெஸ்ட் எடுக்கும் போது, முதல் முறை நெகட்டிவ் வர, அடுத்த டெஸ்டில் பாசிட்டிவ் வருகின்றது.

இதை தொடர்ந்து அந்த கர்ப்பத்தை யாருக்கும் தெரியாமல் சம்யுக்தா கலைக்கலாம் என்று முடிவெடுக்கும் போது வருண், சம்யுக்தாவிற்கும் இடையே வரும் மோதல், பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

வருண் முதன் முறையாக ஹீரோவாக களம் இறங்கியிருக்கும் படம், நியூ எஸ்.ஜே.சூர்யா சாயல் அவர் நடிப்பில் தெரிகின்றது, அடல்ட் படம் என்பதாலேயே முதல் பாதி முழுவதும் இளைஞர்களை கவரும்படி ஒரு சில காட்சிகள் வருகின்றது.

அதோடு யோகிபாபு வருணுடைய நண்பராக வந்து வருணுடன் படம் முழுவதுமே பயணிக்கின்றார், அவரின் ஒன் லைன் காமெடி ஒரு சில இடங்களில் நன்றாக க்ளிக் ஆகியுள்ளது. அதே நேரத்தில் அவருக்கு என்று ஒரு மாஸ் பாடல் கூட இருக்கின்றது, யோகிபாபுவை நம்பியே இன்னும் பல படங்கள் வரும் போல.

கல்லூரியிலேயே ஆபாசம் படம் பார்த்து முதல் காட்சியிலேயே ஹீரோ சஸ்பெண்ட் ஆகின்றார், ஆனால், அவர் 6 மாதம் சஸ்பெண்ட் ஆகுவது எல்லாம் ரொம்ப ஓவர்ங்க, படம் அடல்ட் காமெடி த்ரிஷா இல்லன்னா நயன்தாரா போல் இருக்கும் என்று தால் பலரும் எதிர்ப்பார்த்து வந்திருப்பார்கள்.

ஆனால், படம் விளையாட்டாக இருக்கும் வருண் ஒருநாள் தன் காதலியுடன் எல்லை மீறுவது, அதை தொடர்ந்து அவர் கர்ப்பம் ஆவது, அதே நேரத்தில் அவர் வளர்க்கும் பப்பி நாய் கர்ப்பம் ஆவது, தன் நாய் கர்ப்ப காலத்தில் படும் கஷ்டம் பார்த்து, தன் காதலியிடம் மனம் மாறுவது, இதற்கிடையில் யோகிபாபுவிற்கு என்று வரும் புட்பால் காட்சி என்று கதை போகின்ற திசையில் நாமும் செல்ல வேண்டியதாக உள்ளது.

அந்த நாயுடன் வருணுக்கு இருக்கும் அன்பு கூட பெரிதாக கனேக்ட் ஆகவில்லை, படத்தின் மிகப்பெரிய பலம் தரணின் இசை, பின்னணி பாடல்கள் என கலக்கியுள்ளார், ஒளிப்பதிவும் படம் செம்ம ரிச்சாக காட்டியுள்ளது.

க்ளாப்ஸ்

தரணின் பின்னணி இசை

படத்தில் அங்கங்கு வரும் யோகிபாபு காமெடி காட்சிகள்

பல்ப்ஸ்

ஒரே நேர்க்கோட்டில் பயணிக்காமல் அங்கும் இங்கும் சென்று திரைக்கதை கொஞ்சம் தள்ளாடுகின்றது.

மொத்தத்தில் ஆரம்பத்தில் அடல்ட் காமெடி என்று நினைத்து பார்த்தால் கதை வேறு திசைக்கு சென்று சிறிய எமோஷ்னலுடன் முடிகிறது. இளைஞர்கள் ஜாலியாக ஒரு விசிட் அடிக்கலாம்.