டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டம் பெற்ற ஜப்பான்வீரர்…!

ஜப்பான் பகிரங்ஸ டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நம்பர் வன் வீரரான செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர்  ஜான் மில்மேனுடன் எதிர்கொண்ட ஜோகோவிச் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றினார்.

ஏ.டி.பி டூர் லெவல் போட்டிகளில் இது அவர் வென்ற 76 ஆவது சாம்பியன் பட்டமாகும்.

இதேவேளை சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீராங்கனை அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தியுடன் மோதிய அவர் 3-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். எனினும், அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று கிண்ணத்தை கைப்பற்றினார்.