களத்தில் மூத்த வீரர் செய்த மோசமான செயல்.!

பெங்களூரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா போட்டியை வென்று தொடரை சமன் செய்துள்ளது. அந்த போட்டியில் விராட் கோலி களத்தில், இல்லாத பொழுது இன்சார்ஜாக ரோகித் சர்மா இருந்து செய்த செயல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றது.

அதாவது, தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவின் குறைந்த இலக்கினை விரட்டியபோது 12 வது வரை நவதீப் சைனி தான் பந்து வீசினார். இதில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை தெம்பா பவுமா விளாசினார்.

அதாவது லெக் ஸ்டம்பில் புல்டாஸாக ஆக பந்து வீச தெம்பா பவுமா சுலபமாக அதை பவுண்டரிக்கு விரட்டி உள்ளார். இதையடுத்து கடுப்பான ரோகித் சர்மா நவதீப் சைனியைப் பார்த்து கொஞ்சம் மூளையை பயன்படுத்தி பந்து வீசுப்பா என கூறுவது போல ஆக்ரோஷமாக சைகையில் செய்து காட்டியுள்ளார்.

அந்த நேரத்தில் விராட் கோலி மைதானத்தில் இல்லை. என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.

வைரலாக வீடியோ: