தாம்பத்தியத்தில் இனிமையான தூக்கம்..!!!

இந்த பூவுலகில் பிறந்த அனைவரும் திருமணத்திற்கு பின்னர் தனது துணையுடன் எதிர்கால சந்ததியை உருவாக்கவும்., தங்களின் இல்லற வாழ்க்கையினை இனிதாக துவக்குவதற்கு தாம்பத்தியம் மேற்கொள்வது வழக்கமான ஒன்றாகும். தாம்பத்தியத்தை பொறுத்த வரையில் பலருக்கும் பல விதமான சந்தேகங்கள் இருந்து வருகிறது. அந்த வகையில்., நினைவில் இறுதி வரை இருக்கும் தாம்பத்தியத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பது க்ருய்து இனி காண்போம்.

தாம்பத்தியத்தில் முதலில் துணைக்கு விரும்பமில்லாத அல்லது இயலாத (இயற்கைக்கு மாறான தாம்பத்தியம் மற்றும் தாம்பத்திய நிலைகள் (Sexual Positon)) போன்றவற்றிற்கு வற்புறுத்தல் கூடாது. இதனால் தாம்பத்தியம் மீதான பயம் மற்றும் பதட்டம் (இன்றைய இரவில் என்ன கொடூரத்தை அரங்கேற்ற காத்திருக்கானோ) போன்றவற்றை ஏற்படுத்தி., தாம்பத்தியத்தை வெறுக்க வைத்து விடும்.

இரட்டிப்பு இன்பத்தினை தாம்பத்தியத்தில் பெறுவதற்கு., தாம்பத்தியம் மேற்கொள்ளும் முன்னதாகவும்., தாம்பத்தியம் நிறைவு பெற்றதும் கட்டாயம் பேச வேண்டும். பேசாமல் இருந்துவிட்டு எடுத்த எடுப்பிலேயே பணிகளை துவங்கினால்., அது இரட்டிப்பு இன்பத்திற்கான தாம்பத்தியமாக கட்டாயம் இருக்காது என்பது நினைவில் இருக்க வேண்டும்.

தாம்பத்திய தருணம் வீட்டில் இருக்கும் போது நிகழ்ந்தாலும்., எந்த சமயத்தில் தாம்பத்தியம் நடைபெறும் அல்லது கைகூடும் என்பது யாருக்கும் தெரியாது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போர்வை மற்றும் படுக்கை விரிப்பு., தலையணை போன்றவற்றை சுத்தமாக வைத்திருப்பது கட்டாயமான அவசியம் ஆகும்.

தாம்பத்தியத்தின் போது ஆபாச காணொளிகளை கட்டாயம் காணுவதை தவிர்க்க வேண்டும். ஆபாச காணொளிகள் தாம்பத்திய தருணத்தில் பார்க்கப்பட்டால்., துணையுடன் கூடிய கவனத்தை சிதறடித்து., தாம்பத்திய ஆர்வத்தை வெகுவாக குறைத்துவிடும். தாம்பத்தியம் நிறைவு பெற்றவுடன்., பணியிடத்தில் பணி நேரம் முடித்தார் போல எழுந்து செல்ல கூடாது.

தம்பதிகள் ஒருவர் ஒரு திசையிலும்., மற்றொருவர் மற்றொரு திசையிலும் படுத்து உறங்க முயற்சிக்க கூடாது. இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. தம்பதிகள் தாம்பத்தியம் நிறைவு பெற்றவுடன்., தங்களை ஒருவருக்கொருவர் கட்டியணைத்து பாதுகாப்பு அரண் போல இருந்து உறங்குவதால்., பாதுகாப்பான உணர்வு ஏற்படும்.

தாம்பத்தியத்தின் போது அலைபேசியை கட்டாயம் அனைத்துவிடுதல் மற்றும் ஒலி எழுப்பாத (Silent) வகையில் வைத்திருப்பது நல்லது. அலைபேசி வழக்கமான இயக்கத்தில் இருந்தால்., தாம்பத்திய தருணத்தில் தேவையற்று ஒலித்து., தாம்பத்திய தருணத்தின் அழகை பாழாக்கிவிடும். தாம்பத்திய தருணத்தில் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியில் அல்லது அலைபேசியில் இடமான இசைகளை ஒலிக்க செய்வது நல்லது.

மேலும்., இல்லத்தில் கண்களை உறுத்தாத வகையில் இருக்கும் ஒளிகளையும் பொருத்தி கொள்வது மற்றும் நறுமணத்திற்காக நல்ல வாசனை திரவியத்தை அறை முழுவதும் நிரப்பியிருப்பது தாம்பத்தியத்தை இனிமையாக்கும். இதனால் துணைகள் இருவரும் தாம்பத்திய தருணத்திற்கு தகுந்தார் போல தயாராகி கொண்டு இருப்பார்கள். தாம்பத்தியத்திற்கு முன்னதாக தம்பதிகள் குளிக்க விரும்பும் பட்சத்தில்., இருவரும் சேர்ந்து குளிப்பது நல்லது.

மேலும்., தம்பதிகள் இருவரும் குளிக்கும் சமயத்தில்., ஒருவருக்கொருவர் உதவியாக தங்களின் உடலை மாறி மாறி சுத்தம் செய்வது., அந்தரங்க பாகங்களை சுத்தம் செய்வதை மாறி மாறி செய்து கொள்ளலாம். இதனால் தாம்பத்திய உணர்ச்சிகள் இருவருக்குள்ளும் எரிமலை போல பீறிட்டு எழும். தாம்பத்தியத்தில் முடிந்தவரை அதிகாலை வைத்திருக்கும் அலாரத்தை போல., சத்தம் அதிகளவு எழுப்பி., பக்கத்து வீட்டாரை பதற வைத்து விடாதீர்கள்..

தாம்பத்திய சூழல் உருவாகிவிட்டாலே., அறைகளில் இருக்கும் தேவையற்ற அலாரம் போன்ற பொருட்களை அறைக்கு வெளியே தூக்கி எறிந்துவிட்டு., தம்பதிகள் இருவரும் முன் விளையாட்டுகளை துவங்கி., தாம்பத்தியத்தில் உச்சம் கொண்டு., இருவரின் உச்சத்தையும் இனிமையாக கொண்டாடுங்கள்.. இல்லறம் சிறக்க இதுவும் ஒரு வழியே என்பதை மறவாதீர்கள்..