தை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு

 

பிக்பாஸ் என்றால் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. கலாச்சார சீரழிவு, ஆபாசம் உட்பட பல்வேறு விஷயங்களுக்காக இந்த நிகழ்ச்சியினை பலர் எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் எபிசோடில் 86ம் நாள் காட்சிகள் ஒளிபரப்பபட்டன. அதில் ஒரு நேரத்தில் சோஃபாவில் அமர்ந்து போட்டியாளர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஷெரின் சாண்டியின் மடி மீது ஏறி அமர்ந்துள்ளார். இதை சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.

இதை ஒருவேளை தமிழ்பெண்ணான லாஸ்லியா செய்திருந்தால் ஒட்டுமொத்த உலகமே அவருக்கு எதிராக கிளம்பியிருக்கும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.