விக்ரம் லேண்டர் பற்றி கூகுளில் அதிகம் தேடிய பாகிஸ்தானியர்கள்!

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நிகழ்வு குறித்த விவரங்களை இந்தியாவைப் போல பாகிஸ்தான் மக்களும் கூகுளில் ஆர்வமுடன் அதிகம் தேடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் கூகுளில் சந்திரயான் 2, இஸ்ரோ, விக்ரம் லேண்டர் உள்ளிட்ட வார்த்தைகள் அதிகம் தேடப்பட்டுள்ளன.

இந்தியர்களை போன்று பாகிஸ்தான் மக்களும் இந்த கீ வேர்ட்ஸ்களை பயன்படுத்தி கூகுளில் அதிகம் தேடியுள்ளனர். கூகுள் வெளியிட்ட தகவல் அறிக்கையில், விக்ரம் லேண்டரை பற்றி அறிந்து கொள்வதில் இந்தியர்களை விட பாகிஸ்தானியர்களே அதிகம் ஆர்வம் காட்டியதாக குறிப்பிட்டுள்ளது.

அந்நாளில், விக்ரம்லேண்டர் தொடர்பை இழந்ததும் அனைவரம் கலக்கத்தில் இருக்கும் வேளையில் #IndiaFails என்ற ஹேஸ்டேக்கை பாகிஸ்தானியர்கள் ட்ரெண்ட் செய்தனர். அதற்கு பதிலடி கொடுத்த இந்தியர்கள் #WorthlessPakistan என்ற ஹேஸ்டேக்கை உலக அளவில் ட்ரெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது