மது அருந்தி தாம்பத்தியம் மேற்கொண்டால் என்ன நடக்கும்..!!

பொதுவாக தாம்பத்திய விஷயங்களை பொறுத்த வரையில் பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கும். அந்த வகையில்., பொதுவாக தாம்பத்தியத்தில் நிலையை பெற்று உச்சம் அடைவதற்கு மது அருந்திவிட்டு தாம்பத்தியம் மேற்கொண்டால்., அதிக நேரம் நீடிக்க இயலும் என்ற நம்பிக்கையும் இன்றளவில் அதிகமாக இருந்து வருகிறது. நாம் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் மேற்கொண்டால் தாம்பத்திய செயல்திறனை குறைத்து., தாம்பத்தியம் மீதான ஆர்வத்தை அடுத்தடுத்து வெகுவாக குறைத்துவிடும்.

நாம் மதுவை அருந்துவதால் மனத்தடை அகலுவது ஒரு விதத்தில் உண்மையாக இருந்தாலும்., மறு புறத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பது கூட தெரியாத அளவிற்கு மதுவை அருந்தி., இதன் காரணமாக மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு., நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படுகிறது. மதுவை அருந்திவிட்டு தாம்பத்தியம் மேற்கொண்டால்., தாம்பத்தியம் மீது எந்த விதமான கவனமும் இருக்காது. மதுவின் போதையால் அதிக நேரம் தாம்பத்தியம் மேற்கொண்டது போல உணர்வு மட்டுமே இருக்கும்.

இந்த அதிக நேர உணர்வு உண்மையானது அல்ல.. இதனை உண்மை என எண்ணி மது அருந்திவிட்டு தாம்பத்தியம் மேற்கொண்டு வந்தால்., கல்லீரல் பாதிப்பு உடனடியாக ஏற்படும் என்பது தான் உண்மை. தாம்பத்தியத்தின் போது ஆணிற்க்கு சுரக்கும் ஹார்மோனை பக்குவப்படுத்தும் பணியை கல்லீரல் செய்து வருகிறது. மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படைந்து., ஹார்மோன் சுரப்பு சீராக செயல்பட்டும்., கல்லீரல் தனது பணியை செய்ய இயலாமல் போவதால்., ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை வெகுவாக குறைகிறது.

இதன் காரணமாக பெண்களுக்கு தாம்பத்தியத்தில் ஈடுபாடு வராமல் இருக்கும் நிலையை ஏற்படுத்துகிறது. மேலும்., சிலர் மன அழுத்தத்தை குறைப்பதற்காக மது அருந்தி பப்பில் நடனம் ஆடுவதாக தெரிவிரிப்பார்கள். இவ்வாறு கூறுபவர்களுக்கு ‘மது அருந்திவிட்டு நடனம் ஆடினால்., மன அழுத்தம் குறையும் என்று கூறியவர்’ யார்? என்ற கேள்வியை தான் கேட்க வேண்டும். மது அருந்திவிட்டு இரைச்சலான இசைக்கு நடனமாடுவது., மன அழுத்தத்தை அதிகரிக்க சுரக்கும் அட்ரினலின் அளவை அதிகரித்து., உடலின் நலனை அதிகளவு கெடுக்கும்.

இதுமட்டுமல்லாது அளவுக்கு அதிகமான போதை மற்றும் நடனம் பின்னர் சண்டை என்ற பிரச்சனையை பெரிதாக கொண்டு செல்லும். இதனை நாகரீகம் என்று கூறுவது சரியானதல்ல.. இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றமும் தொடர்ந்து வரும். இந்த நிலையில்., தாம்பத்தியத்தின் போதோ அல்லது பிற சமயத்திலேயே கணவன் – மனைவி முத்தம் கொடுக்கும் சமயத்தில் துர்நாற்றம் வீசும்.

இதனால் உங்களின் மனைவிக்கு உங்கள் மீதான அருவெறுப்பு மற்றும் கோபம் ஏற்படும். தாம்பத்திய தூண்டுதல் என்று நீங்கள் அருந்தும் மது., தாம்பத்திய வாழ்க்கையை அடுத்தடுத்து பாதிக்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும். தாம்பத்திய வாழ்க்கை என்பது தம்பதிகளுக்குள் பாதிக்கப்படும் பட்சத்தில் இல்லற வாழ்க்கையும் பாதிப்பிற்கு உள்ளாகி., பல பிரச்சனைகள் ஏற்படும். மது அருந்திவிட்டு தாம்பத்தியம் என்பது உங்களின் இல்லற வாழ்க்கை மற்றும் தாம்பத்திய வாழ்க்கைக்கு நீங்களே வைக்கும் பட்டாசு என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்….