விஜய்க்காக காத்திருக்கும் மிகப்பெரும் இழப்பில் இருக்கும் குடும்பம், சந்திப்பாரா?

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக பிகில் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் பிகில் படத்தின் படப்பிடிப்பில் ஒரு தொழிலாளர் ஒருவர் இறந்தார், அவருக்கு படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்ட போது மருத்துவமனை வரை விஜய் சென்றார்.

அதை தொடர்ந்து பிகில் தயாரிப்பு நிறுவனம் அந்த குடும்பத்திற்கு மிகப்பெரிய பண உதவி ஒன்றை செய்துள்ளதாம்.

விஜய்யும் இதை அறிந்து கண்டிப்பாக நாமும் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம், விஜய்யின் வருகையை எதிர்ப்பார்த்து அந்த குடும்பம் தற்போது காத்திருக்கின்றது.