இதை மட்டும் செய்து பாருங்கள்., உங்கள் மனைவி அப்படியே அசந்து போய்விடுவார்.!

வீட்டுக்கு சென்றாலே மனைவி சத்தம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எப்போதும் கோபமாகவே இருக்கிறாராள் என்று கணவன்மார்கள் சொல்வதை கேட்டிருப்போம். உங்கள் மனைவியை எப்படி உங்கள் வசம் வைத்திருக்க வேண்டும் என்று தெரியுமா இதை செய்தால் போதும்.

இன்றைய காலத்தில் கணவன் மனைவி உறவில் பல பிரச்சனைகளும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. வீட்டிற்கு போனாலே மனைவி சும்மா எரிந்து விழுந்துக்கொண்டே இருக்கிறாள் என ஆண்கள் கூறுவதை கேட்டிருப்போம். இங்கு மனைவியை வசப்படுத்தும் தந்திரங்களை அறியுங்கள்.

அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது அலைபேசியில் அழைத்து, அவர்களுக்கு பிடித்த  பொருள்களையோ அல்லது தின்பண்டங்களையோ சொல்லி வாங்கி வரவா என கேட்பது அவர்களுக்கு பிடிக்கும்.

மனைவியின் பிறந்த நாள், குழந்தைகள் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றை மறக்காமல் ஞாபகத்தில் வைத்து கொண்டு அவர்களை வாழ்த்தி அவர்களுக்கு பிடித்தவற்றை செய்யுங்கள்.

புதிய ஆடைகளை அணிந்து வரும்போது வைத்த கண் வாங்காமல் பார்ப்பது. நீ இந்த ஆடையில் அழகாக இருக்கிறாய் என்று பாராட்டு தெரிவிக்கவேண்டும். எப்பவும் முகத்தை கோபமாக வைத்து கொள்ளாமல், அவ்வப்போது அல்லது மனைவியை பார்க்கும் போதாவது சிரித்து கொள்ளுங்கள்.

விடுமுறை நாட்களில் உங்களுக்கு தெரிந்த உணவு வகைகளை சமைத்து கொடுங்கள். வீட்டில் ஆணி அடிப்பது போன்ற சின்னச்சின்ன வேலைகளை கேட்டு முடித்து கொடுங்கள்.

சமையலறை சாமான்களை கவனித்து தீரும் நிலையில் உள்ள மளிகைப் பொருட்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள்.

வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒரு நாளாவது ஓட்டல், சினிமா, பார்க், பீச் என்று வெளியிடங்களுக்கு அழைத்து செல்லுங்கள்.

எப்பவுமே அம்மாவை தொந்தரவு செய்து வேலைவாங்கும் குழந்தைகளை ஒரு இரண்டு மணிநேரம் உங்க கண்காணிப்பில் வைத்து கொள்ளுங்கள்.

குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள். உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்த்தால் பெரிதாக தோன்றாது.

மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள். கூர்ந்து கவனியுங்கள். கொஞ்ச நேரம் கழித்து ‘இப்ப என்ன சொன்னே’ன்னு அசால்டா கேட்கக்கூடாது.

பூவுக்கு மயங்காத பெண்கள் இருக்க முடியாது. எனவே மனைவிக்கு பூவை வாங்கி கொடுத்து அசத்துங்கள்.

இப்படி செய்தால் கணவன் மனைவிக்கு உள்ளே சண்டைகள் விலகி நெருக்கம் அதிகரிக்கும்.