வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான்!

பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் சிட்டகாங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான சர்வதேச போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறை என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்த போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் வங்கதேசத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் அணியின் அனுபவத்தை விட உயர்ந்த அணி வ்சங்கதேசம் என்பதோடு சொந்த மண்ணில் விளையாடுவதால் வங்கதேசம் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணி 342 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. ஆனால் அதனை எடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது.

அதனை அடுத்து களமிறங்கிய ஆப்கனிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில், முதலில் சறுக்கினாலும் பின்னர் அடுத்தடுத்து வந்த வீரர்களின் சிறப்பான ஆட்டத்தினால் 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேச அணிக்கு வெற்றி இலக்காக 398 ரன்களை நிரநயித்தது ஆப்கனிஸ்தான். இதையடுத்து வங்கதேச அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தற்போது வரை 143 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருக்கிறது

நேற்று முதல் சிட்டகாங் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆட்டம் நடைபெறாமல் இருக்கிறது. ஒருவேளை இன்று முழுவதும் ஆட்டம் நடைபெற்றிருந்தால் ஆப்கானிஸ்தான் அணி தன்னுடைய டெஸ்ட் வெற்றியை வங்கதேச அணிக்கு எதிராக பெற்று ஒரு வரலாற்று நிகழ்வை உருவாக்கியிருக்கும்.

தொடர்ந்து மழை பெய்ததால் நிம்மதியாக இருந்த வங்கதேச அணிக்கு இறுதி நேரத்தில் போட்டி ஆரம்பமாக சிக்கல் உருவானது. சாகிப், சௌம்யா என இரு மூத்த வீரர்கள் இருந்ததால் சமாளிப்பார்கள் என பார்த்தால் சாகிப் வந்த வேகத்தில் அதிர்ச்சி அளித்தார். அதனை தொடர்ந்து வந்தவர்கள் ரஷீத் கானின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெளியேறினார்கள். இறுதியில் ஆப்கனிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெற்றது.

ரஷீத் கான் இந்த ஆட்டத்தில் 11 விக்கெட்டுகளும் அரைசதமும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இது கேப்டனாக முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் இரண்டு டெஸ்ட் வெற்றிகளை பெற குறைந்த போட்டிகளை எடுத்த்துக்கொண்ட அணிகள் பட்டியலில் ஆஸ்திரேலியாவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது ஆப்கனிஸ்தான்.