டயாபர்கள் குறித்த பகீர் உண்மை தெரியுமா உங்களுக்கு?

இன்றளவில் உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு பாம்பெர்ஸ் மற்றும் டயாபர்கள் உபயோகிப்பது வழக்கம். அவ்வாறு வாங்கி உபயோகப்படுத்த படும் பாம்பர்ஸ்களில் ஒரு பாம்பர்ஸ் என்பது நாள் ஒன்றுக்கு மட்டுமே என்று எழுதப்பட்டிருக்கும்.

குழந்தைகளுக்கு அந்த நாளின் டயாபரை அணிந்துவிட்டால் இரவு உறங்கும் வேலையில் குழந்தை சிறுநீர் கழிக்கும் பட்சத்தில்., டயாபரில் உறிஞ்சப்பட்டு அதில் இருக்கும் வேதிப்பொருள் காரணமாக ஜெல் போன்ற நிலைக்கு மாற்றப்பட்டு., குழந்தை நிம்மதியாக உறங்குகிறது.

இதன் காரணமாக குழந்தைகள் இரவு வேளையில் படுக்கையில் சிறுநீரை கழித்தாலும் தூக்கத்தில் இருந்து எழாமல்., பெற்றோரை எழுப்பாமல் உறங்குகிறது. பெரும்பாலும் நாம் உறங்கும் நேரத்தில் இறுக்கமான ஆடைகளை கழற்றி விட்டு., காற்றோட்டமான ஆடைகளை அணிந்து உறங்குகிறோம்.

இரவு வேளையில் உறங்கும் குழந்தைகளுக்கு காற்றோட்டம் இல்லாத சூழ்நிலையில்., அவர்கள் அதனை அனுபவிப்பதால் சில பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலும் வெளியூர் பயணத்திற்கு குழந்தைகளுடன் செல்லும் சமயத்தில் டயாபர்களை பெற்றோர்கள் அதிகளவு உபயோகம் செய்வது வழக்கம்.

இதன் காரணமாக குழந்தைகள் டயாபரில் சிறுநீர் கழித்ததை கண்டு கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில்., சிறுநீரை ஜெல்லாக மற்றும் வேதிப்பொருளின் காரணமாக அலர்ஜி ஏற்பட்டு பிறப்புறுப்பில் அரிப்பு மற்றும் புண்கள் போன்ற பிரச்சனை ஏற்படும்.

முடிந்தளவு குழந்தைகளுக்கு டயாபர்களின் உபயோகத்தை குறைத்து கொள்வது., குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.