5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவர்…. கண் விழித்ததும் மனைவியிடம் கூறிய அந்த வார்த்தை!

சீனாவில் நீண்ட 5 ஆண்டு காலம் கோமாவில் இருந்த கணவரை நாளுக்கு 20 மணி நேரம் அக்கறையுடன் கவனித்து வந்த மனைவியிடம், நினைவு திரும்பிய அவர் கூறிய வார்த்தை அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

சீனாவின் ஹூபே பிராந்தியத்தில் குடியிருந்து வரும் Li Zhihua என்பவர் கடந்த 2013 ஆண்டு சாலை விபத்தில் சிக்கியுள்ளார்.

இதில் அவரது மூளையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

மருத்துவர்கள் அவரை குடியிருப்பில் வைத்தே அக்கறையுடன் கவனித்து வந்தால் அவர் பிழைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து குடியிருப்புக்கு திரும்பிய அவரை அவரது மனைவி, உறவினர்கள் அனைவரும் பொறாமைப்படும் அளவுக்கு கவனித்துள்ளார்.

நாளுக்கு 20 மணி நேரம் தமது கணவரை கவனித்துக் கொண்ட அவர், தினமும் 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே தூங்கி ஓய்வெடுத்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென்று ஒருநாள் சுய நினைவுக்கு திரும்பிய லீ, தமது 57 வயது மனைவியிடம், உன்னை மனதார காதலிக்கிறேன் என கூறியுள்ளார்.

கோமா நிலையில் இருந்து லீ சகஜ நிலைக்கு திரும்புவது மிகவும் கடினம் எனவும், இதே நிலையில் மட்டுமே இனி எஞ்சிய காலம் அவர் இருப்பார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மட்டுமின்றி, அக்கறையுடன் கவனித்தால் சிலவேளை வாய்ப்புகள் ஏற்படலாம் எனவும், இருப்பினும் அது அரிதிலும் அரிது என கூறி கைவிட்டுள்ளனர்.

மருத்துவர்களின் அந்த கூற்றை பொய்யாக்க வேண்டும் என்றே தாம் உழைத்ததாக கூறும் 57 வயதான Zhang Guihuan,

அவர் படுத்திருந்த படுக்கை அருகே இருந்து தாம் இந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட விலகியது இல்லை எனவும்,

அவருக்கு பிடித்தமான பாடல்களை இசைக்கவிட்டபடி, அவர் பேசவில்லை என்றாலும், அவருடன் பேசிக் கொண்டே நாட்களை கடத்தியதாக தெரிவித்துள்ளார்.

இதனால் Zhang Guihuan இந்த 5 ஆண்டுகளில் சுமார் 10 கிலோ அளவுக்கு உடல் எடை மெலிந்துள்ளார்.

சகஜ நிலைக்கு லீ திரும்பினாலும், மருத்துவ சிகிச்சை தேவை என்பதால் தற்போது அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.