எப்படி இருந்த சிறுவன்… இவ்வளவு கொடூரமாக மாறியது எப்படி தெரியுமா?

சிரியாவில் நடந்த வான்வழி தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட 3 வயது சிறுவன் தற்போது கண்களை இழந்து நிற்பதால், சிறுவனின் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக சிரியாவில் நடந்த உள்நாட்டு போரில் ஏராளமான உயிர்கள் பறிபோனாது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த டூமா நகரில் ரசாயன தாக்குதல்கள் நடந்ததாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் எதிர்த் தாக்குதல் தொடுத்தன

இதன் காரணமாக அங்கிருக்கும் மக்கள், அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 2018-ஆம் ஆண்டு துருக்கி நடத்திய வான்வழி தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக சிறுவன் ஜூமா குடும்பத்தினர் பேருந்தில் தப்பிய போது, அதில் சிறுவன் ஜூமா பாதிக்கப்பட்டான்.

இதனால் பலத்த காயம் அடைந்த ஜூமா இப்போது எப்படி இருக்கிறான் என்பது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் பேட்டி எடுத்துள்ளது.

அந்த சம்பவத்திற்கு பின் Jouma குடும்பத்தினர் Lebanon-க்கு குடியேறியுள்ளனர். அங்கும் கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்து வரும் Jouma பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கிறான்.

தற்போது 4 வயதாகும் Jouma-விக்கு இரண்டு கண்களுமே தெரியாது. அதுமட்டுமின்றி அவனுடைய முகத்தில் தழும்புகள் அப்படியே இருக்கின்றன. இது போரின் கோர முகத்தை காட்டுகின்றன.

எப்படி அழகாக இருந்த சிறுவனா? இப்போது இப்படி இருக்கிறான் என்ற அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதில் Jouma மட்டுமின்றி, அவருடைய தந்தையின் கால்களிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. அவருடைய இரண்டு கால்களிலும் பெரும்பாலான விரல்களே இல்லை.

இப்போது இவர்கள் இருக்கும் லெபானானில் ஏற்கனவே அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

UN அமைப்பு ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட அகதிகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளதால், இவர்கள் ஐரோப்பியா நாடுகளுக்கு அகதிகளாக செல்ல முடிவு செய்துள்ளனர்.

மேலும் Jouma-வுக்கு இரண்டு கண்களுமே தெரியாததால், அவன் தன்னுடைய கைகளை வைத்தே, எந்த ஒரு பொருட்களையும் பார்க்குகிறேன்.

தன்னை பற்றி செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களின் கமெராக்கள் போன்றவைகளை கைகளால் தொட்டு, அதை எப்படி பயன்படுத்துவது என்பதில் தீவிரவமாக இருக்கிறான், ஆனால் இவனின் எதிர்காலம் குறித்து தான் அவனின் பெற்றோர் கவலையில் இருக்கின்றனர்.

சிரியாவில் நடந்த தாக்குதல்களின் பாதிப்பு எந்தளவிற்கு இருக்கும் என்பதை சிறுவன் Jouma-வை பார்க்கும் போதே தெரிகிறது.