20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி…

இந்தியாவில் 20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமியை கண்முடித்தனமாக அடிக்கும் நபரின் வீடியோ வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆந்திரபிரதேசத்தின் ஆனந்தபுர் மாவட்டத்தின் டோடி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய உறவுக்கார 20 வயது நபரை காதலித்து வந்துள்ளார்.

இந்த விடயம் அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர இதனால், அவர்கள் அந்த கிராமத்தில் இருக்கும் 70 வயது மதிக்கத்தக்க ஊர் தலைவர் என்று கூறப்படும், லிங்கன்னா என்பவரிடம் இது குறித்து கூறியுள்ளனர்.

அதன் பின் இது குறித்து நடத்தப்பட்ட பஞ்சாயத்தின் போது, சிறுமி, அவரை மறக்க முடியாது திருமணம் செய்து வையுங்கள் என்று அடம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த லிங்கன்னா, அவரை அடித்தததுடன், அங்கிருந்த குச்சியால் அவரை கண்முடித்தனமாக தாக்கியுள்ளார். இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால், அந்த வீடியோவைக் கண்ட பொலிசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு லிங்கன்னாவை கைது செய்துள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், முழு விசாரணைக்கு பின்னரே எந்த தகவலும் தெரிவிக்க முடியாது என்று பொலிசார் கூறியுள்ளார்.