பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த சிறுமி: தற்போது அவரது நிலை????

அமெரிக்காவில் பிறப்புறுப்பு ஏதும் இன்றி பிறந்த சிறுமி தற்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தை சேர்ந்தவர் ஜோதி காம்பில்-ரிட். தற்போது 18 வயதாகும் ஜோதி, பிறக்கும்போதே பாலுறுப்பு ஏதும் இன்றி பிறந்தவர்.

ஆனால் தம்மை ஒரு பெண் என பாவித்தே அவர் இதுவரை வளர்ந்துள்ளார். மட்டுமின்றி, அவரது வளர்ப்பு பெற்றோரும் ஜோதியின் விருப்பத்திற்கு எதிராக செயல்படவும் இல்லை என கூறப்படுகிறது.

காரணம் ஜோதியை தத்தெடுத்தவர்கள் திருநங்கை தம்பதிகள் என்பதால் அவர்கள் ஜோதியின் விருப்பத்திற்கு பாலுறுப்பு விவகாரத்தை விட்டுள்ளனர்.

மேலும், ஒரு பெண்ணாகவே தம்மை பாவிக்கும் ஜோதி சில காலமாக தொடர்ந்து ஈஸ்ட்ரோஜன் எடுத்துக் கொள்கிறார்.

ஒரு பெண் எனவே தம்மை கருதுவதால், எந்த பாலினம் என்ற கேள்விக்கு முக்கியத்துவம் இல்லை என அழுத்தமாக பதிலளிக்கும் ஜோதி,

தற்போது பாலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருகிறார். மேலும், பெண்களுக்கான உறுப்பு மாற்று அறிவை சிகிச்சையையே அவர் தெரிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி ஆண் நண்பர்களுடன் டேட்டிங் செய்து கொள்ளும் ஜோதி, தமது நிலை தொடர்பில் முன்னரே அவர்களிடம் சொல்லிவிடுவதாகவும்,

அதில் தமக்கு எந்த சிக்கலும் இல்லை என பதிலளித்துள்ளார். மட்டுமின்றி பெண்களுடனும் நெருக்கமான உறவை பேணுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை எனவும் ஜோதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒரு கிராமத்தில் பிறந்த ஜோதியை, அவரது இந்த நிலை தொடர்பில் தெரியவந்த அமெரிக்க திருநங்கை தம்பதிகளான சூ மற்றும் பேட்ரிக் ஆகிய இருவரும் முழுமனதுடன் தத்தெடுத்துள்ளனர்.

தற்போது ஜோதியின் பாலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வரவேற்றுள்ள இருவரும், அவரது முடிவில் தங்களுக்கு மகிழ்ச்சியே எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தமது வளர்ப்பு பெற்றோருக்கு நன்றி கூறும் ஜோதி, அவர்களால் மட்டுமே தாம் இதுவரை உயிர் பிழைத்துள்ளதாகவும், தமது இந்த நிலையை எவரும் ஏற்றுகொள்வது கடினம் எனவும் நெகிழ்வுடன் பதிவு செய்துள்ளார்.