லண்டனில் அழகிய இந்திய பெண் செய்த மோசமான செயல்…

லண்டனில் உள்ள வணிக வளாகத்தில் கொள்ளையடித்த வழக்கில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் உள்ளிட்ட மூவர் குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தெற்கு லண்டனில் உள்ள ஒரு வணிகவளாகத்துக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி இந்திய பெண்ணான ஹர்பிரீத் கவுர் (28), மோனிகா பஷியஸ் (42) மற்றும் டைரோன் வாக் (40) ஆகியோர் சென்றனர்.

பின்னர் அங்குள்ள ஒரு கடையில் இருந்து விலையுயர்ந்த லேசர் இயந்திரங்கள் மற்றும் சில பொருட்களை கொள்ளையடித்தனர் .

பின்னர் கடை ஊழியரை உள்ளேயே வைத்து பூட்டி விட்டு மூவரும் தப்பி சென்றனர்.

இது தொடர்பாக பொலிசார் விசாரித்து வந்த நிலையில் மூன்று பேரும் அந்த மாதத்திலேயே கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீதான வழக்கு விசாரணை லண்டன் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மூவரும் குற்றவாளிகள் என தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மூவருக்குமான தண்டனை விபரம் செப்டம்பர் 19ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.