மோடி அப்படி கூறவே இல்லை! இந்தியா திட்டவட்ட மறுப்பு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக, இந்திய பிரதமர் மோடி கோரிக்கை வைக்கவில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாட்கள் பிரதமராக அமெரிக்கா சென்றுள்ளார். வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, இந்திய பிரதமர் மோடியை இரண்டு வாரங்களுக்கு முன்பு சந்தித்தபோது, காஷ்மீர் பிரச்சனையில் சமரச தூதுவராக தன்னை செயல்படும்படி அவர் கேட்டுக் கொண்டதாக டிரம்ப் தெரிவித்தார். அத்துடன், மோடி கேட்டுக்கொண்டதன் படி காஷ்மீர் பிரச்சனையில், தான் தூதுவராக செயல்பட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், டிரம்பிடம் அவ்வாறு மோடி கோரிக்கை வைக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறுகையில், ‘பாகிஸ்தான் உடனான பிரச்சனையில் இருதரப்பு பேச்சுவார்த்தை மட்டுமே உகந்ததாக இருக்கும் என்பதில் உறுதியான நிலைபாட்டுடன் இந்தியா இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிராட் ஷெர்மென், ‘அமெரிக்க ஜனாதிபதியின் முதிர்வற்ற மற்றும் சங்கடத்திற்குரிய பேச்சுக்காக இந்தியத் தூதரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஷ்மீர் பிரச்சனையானது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலானது என்றும், இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதை அமெரிக்கா வரவேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், காஷ்மீர் பிரச்சனையை இருதரப்பு பேச்சுவார்த்தையால் மட்டும் தீர்க்க முடியாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளா