கணவருக்கு கடைசியாக அனுப்பிய மெசேஜ்: அலுவலக ஜன்னல் வழியே குதித்த காதல் மனைவி

மேற்குவங்க மாநிலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண், அலுவலக கட்டிடத்தின் ஜன்னலில் இருந்து திடீரென வெளியில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஜாஸ்மின் மித்ரா (28) என்கிற இளம்பெண் கடந்த 7 வருடங்களுக்கு முன் அனிருத்தா என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டார்.

ஜாஸ்மினுக்கு நீண்ட நாட்களாகவே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருந்துள்ளது. ஆனால் அவருடைய மருத்துவ நிலைமைகள் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, ஒரு நிலையான மனநிலையில் இல்லை என கூறப்படுகிறது.

6 மாத காலம் அவருடைய கணவர் வேலை இல்லாமல் வீட்டில் இருந்ததால், நிதி நெருக்கடியை சமாளிக்க, மாமியார் வீட்டிலிருந்து வெளியேறி தன்னுடைய தாய் வீட்டில் வந்து தங்கியிருந்தார்.

இந்த நிலையில் அலுவலகத்திற்கு வந்த ஜாஸ்மின், என்னுடைய நிதி விவரங்கள் மற்றும் வங்கி பின் எண்களைப் பற்றித் உனக்கு தெரியுமா என கணவரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு மெசேஜ் செய்துள்ளார்.

பின்னர் 7 மாடியில் அமைந்திருக்கும் தன்னுடைய அலுவலகத்தின் ஜன்னல் பகுதிக்கு சென்ற அவர் காலணிகளை கழற்றி வைத்துவிட்டு அங்கிருந்து சத்தமிட்டபடியே வெளியில் குதித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவலாளி, ஜாஸ்மின் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கணவன் மனைவி இருவருமே மகிழ்ச்சியாக இருந்து வந்துள்ளதால் என்ன காரணம் என தெரியாமல் திகைத்துள்ளனர்.

மேலும், ஜாஸ்மின் செல்போனை கைப்பற்றி அதனை ஆராய்ந்து வருகின்றனர்.