விஜய்க்கு ஜோடியாவா நடிக்க போறா? லாஸ்லியாவை சீண்டிய வனிதா

இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் பாப்புலர் ஆகியுள்ளார் லாஸ்லியா. அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

மேலும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆர்மி மற்றும் நேவி என பல ரசிகர் மன்றங்கள் உருவாகியுள்ளன. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சென்ற வாரம் வெளியேற்றப்பட்ட வனிதா அளித்துள்ள பேட்டியில் லாஸ்லியாவை சீண்டியுள்ளார்.

“யா என பெயர் முடியும் பலரை மக்களுக்கு பிடித்துவிடுகிறது. முதலில் ஓவியா, இப்போது லாஸ்லியா. ஓவியாவுக்கு சொந்தமாக மூளை இருந்தது, எதையும் தைரியமாக பேசினார். ஆனால் லாஸ்லியா குழந்தை, அமைதியாகவே இருக்கிறார். அவ்வப்போது டான்ஸ் ஆடுகிறார். வெளியில் வந்தபிறகு அவர் ஜீவி பிரகாஷ் போன்ற நடிகருக்கு ஜோடியாக நடிக்கபோகிறார். விஜய்க்கு ஜோடியாகவா நடிக்க போரா..?” என கேட்டுள்ளார் வனிதா.