சமையல்காரர் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் கொடுத்த மகாராணி..

பிரித்தானிய ராஜகுடும்பத்துக்கு திறமையான சமையல்காரர் தேவை என மகாராணி சார்பில் பக்கிங்காம் அரண்மனை விளம்பரம் வெளியிட்டுள்ளது.

இந்த பணி பக்கிங்காம் அரண்மனையில் தான் என்றாலும் ராஜ குடும்பத்துக்கு சொந்தமான இடங்களுக்கும் சென்று சமையல்காரர் சமைக்க வேண்டும்.

பக்கிங்காம் அரண்மனையில் பணியில் சேருபவர் திறமையாக உயர்தர வகையில் உணவை தயார் செய்து தரவேண்டும் என்பது முக்கிய விடயமாகும்.

மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, அதற்கேற்றார் போல உயர்தர பொருட்களை உள்ளடக்கி விதவிதமான உணவுகளை சமைத்து தர வேண்டும்.

இந்த பணிக்கு வருட சம்பளமாக £22,076.04 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே பக்கிங்காம் அரண்மனையில் உள்ள திறமையான சமையல்காரர்களுடன் மகிழ்ச்சியுடன் சேர்ந்து பணியாற்றலாம் என விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த பணி நிரந்தரமானது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாரம் ஐந்து நாட்களுக்கு பணி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.