நடுவானில் இருந்து தவறி ஆற்றில் மூழ்கிய விமானம்!

வடக்கு ஸ்வீடனில் ஸ்கைடிவிங் பயணத்தின் போது விமானம் வானத்திலிருந்து கீழே விழுந்ததில் 9 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிப்ஸ் ஏரோ ஜிஏ 8 ஏர்வான் என்கிற ஒற்றை எஞ்சின் கொண்ட விமானமானது ஸ்கைடிவிங் வீரர்கள் மற்றும் மற்றும் ஒரு பைலட் என 8 பேருடன் உமேயா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

அடுத்த சில நிமிடங்களில் அப்பகுதியில் உள்ள தீவில் விழுந்து விபத்தில் சிக்கியுள்ளது.

ஸ்டோர்சாண்ட்ஸ்கர் தீவில் உள்ளூர் நேரம் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்தது என அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

விமானம் கட்டுப்பாட்டை இழந்து மரங்களின் மீது மோதி கீழே விழும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

சில பாராசூட்டிஸ்டுகள் விபத்துக்கு சற்று முன்னர் விமானத்திலிருந்து குதிக்க முயன்றதாகக் ஸ்வீடிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலியானவர்கள் அனைவரும் ஸ்வீடிஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் இரட்டை குடியுரிமை பெற்றிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பலியானவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.