ஊருக்கு வந்து 16 வயது மகளை பார்த்து கதறிய தந்தை !

இந்தியாவில் பள்ளி மாணவி ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் மது ஸ்ரீ (16). பத்தாம் வகுப்பை முடித்த இவர் இடைநிலை முதலாமாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் ஒரு வருடமாக அகில் ராஜேஷ் என்ற மாணவன் மதுவை பின் தொடர்ந்து வந்து தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்தான்.

இது குறித்து மது பெற்றோர் உதவியுடன் பொலிசில் புகார் அளித்த நிலையில் அகிலை அழைத்த பொலிசார் அவனுக்கு புத்திமதி கூறி எச்சரித்து அனுப்பினார்கள்.

அவன் 18 வயதாகாத சிறுவன் என்பதால் பொலிசார் அவனை தண்டிக்கவில்லை.

இதையடுத்து இந்த பிரச்சனையை தவிர்க்க மதுவை அவர் பெற்றோர், பாட்டி வீட்டில் தங்க வைத்திருந்தனர். ஆனால் பொலிஸ் எச்சரிக்கையையும் மீறி அகில் மீண்டும் மதுவை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தான்.

இதனால் மனமுடைந்த மது தனது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அரபு நாட்டில் இருக்கும் அவர் தந்தைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் ஊருக்கு வந்த அவர் மகள் சடலத்தை பார்த்து கதறி அழுதார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தலைமறைவாக உள்ள அகிலை தேடி வருகிறார்கள்.

இதனிடையில் அகில் தனது வாட்ஸ் அப் ஸ்டேடஸில், என்னை விட்டு போய் விட்டாயா மது? என வருத்தமுடன் பேசியபடி டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.