இந்தியா தனித்துவமான நிறத்திற்கு மாறியது ஏன் தெரியுமா?

இந்திய அணியானது இன்று நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் புதிய நிறத்திலான ஆடையில் களமிறங்கியுள்ளது.

இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் பலரும், சிலிண்டர் வேலை செய்பவர்களை போல் இருப்பதாக இணையத்தில் கேலி செய்து வருகின்றனர் .

இந்த நிலையில் ஆடை நிறத்திற்கான காரணம் குறித்து செய்தி வெளியாகியுள்ளது. ஒருநாள் போட்டிக்கான புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகளுக்கு இடையில் நடக்கும் போட்டியினை மட்டும் , சர்வதேச கிரிக்கெட் வாரியம் யுனிசெப் (UNICEF) உடன் இணைந்து நடத்துகிறது.

இதனை (one day 4 children) ஒன் டே ஃபார் சில்ட்ரன் என்கிற பெயரில் விளம்பரப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே இந்திய அணி ஆரஞ்சு நிறத்திலான ஆடையில் களமிறங்கியுள்ளது.

இந்த போட்டியின் மூலம் திரட்டப்படும் நிதியானது, உலகெங்கிலும் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கான யுனிசெப் நிறுவனத்தின் பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.