மசூதிகளின் கண்ணாடிகள் மற்றும் கடைகள் உடைப்பு… ஒருவர் பலி…

இலங்கையில் மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு சொந்த கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இதில் ஒருவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான செய்தியை Reuters பத்திரிக்கை வெளியிட்டுள்ளதாக @SriLankaTweet டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கினியமா, குயிலிபிட்டிய, ஹெட்டிபோல போன்ற பகுதிகளில் உள்ள மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகள் மீது ஒரு குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட மசூதிகள், கடைகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.