டோனி செய்த மிகப்பெரிய தவறு இதுதானா? ஒரு ரசிகனின் குரல்

நேற்று நடந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டியில், அனுபவ வீரர் ஹர்பஜன் சிங்கை கடைசி ஓவரில் டோனி ஏன் களமிறக்கவில்லை என்ற கேள்வி ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

12வது ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. அதில் மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

முன்னதாக சென்னை அணி துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோது, சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வாட்சன்(80) கடைசி ஓவரில் ரன்-அவுட் ஆனார்.

அதன் பின்னர், அனுபவ வீரர் ஹர்பஜன் சிங் தான் களமிறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தாக்கூரை களமிறக்கினார் டோனி.

ஆனால், கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தாக்கூர் ஆட்டமிழந்தார். இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. ஒருவேளை ஹர்பஜன் சிங் களமிறங்கியிருந்தால் போட்டியின் முடிவே மாறியிருக்கும் என்று பரவலாக ரசிகர்களிடையே பேசப்படுகிறது.

அத்துடன் டோனி ஏன் ஹர்பஜனை கடைசி ஓவரில் களமிறக்கவில்லை என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.