அலைபேசியை தொடர்ந்து உபயோகம் செய்தால் என்ன மாற்றம் ஏற்படும்?.!!

இன்றுள்ள காலத்தில் அலைபேசி என்பது நமது கைகளில் இருந்து நம்மை பிரிக்க முடியாத அளவிற்கு ஒரு பெரும் அங்கத்தை தன்னுள் கொண்டுவிட்டது. இரவில் உறங்காமல் இதனை தடவிக்கொண்டு இருக்கும் நபர்கள் ஏராளம். தினமும் எதனை நாம் மறந்தாலும்., மறக்கவிட்டாலும் நமது அலைபேசியின் உபயோகத்தை மறுக்க இயலாது.

இந்த அலைபேசி வந்ததன் மூலமாக நமக்கு பலவிதமான நன்மைகள் ஏற்பட்டுள்ளதையும் நம்மால் மறைக்க முடியாது. இந்த நேரத்தில் இந்த அலைபேசியின் மூலமாக ஏற்பட்ட பல பாதிப்புகளையும் நாம் அறிவோம். அந்த வகையில்., ஒரு நபர் எவ்வுளவு நேரம் அலைபேசியை உபயோகம் செய்வதன் மூலமாக., அதில் இருந்து வெளியேறும் ரேடியேஷனை பொறுத்தும்., அலைபேசியின் தற்போதையை தரத்தை பொருத்தும் ரேடியேசன் அளவானது வெளியேறுகிறது.

இதன் காரணமாக முடிந்தளவு குறைந்தளவு ரேடியேஷனை வெளியேறும் அலைபேசியை தேர்வு செய்வது நல்லது. நாம் அலைபேசியில் அழைப்புகளை பேசும் சமயத்தில் காதிற்கு அருகில் வைத்து பேசும் தொலைவை பொருத்தும்., ஹெட்செட் பயன்படுத்துவதும்., இந்த நேரத்தில் அதிகளவு ரேடியேஷனை வெளிப்படுத்தாத அளவிற்கு உள்ள பொருட்களை உபயோகம் செய்வது நல்லது.

அலைபேசியை அதற்க்கு அருகில் இருக்கும் சிக்னல் டவர்களின் மூலமாக நமக்கு சிக்னல் கிடைக்கிறது. இந்த நேரத்தில் அதிகளவு சிக்லானானது சிக்னல் டவர்கள் மூலமாக நமக்கு கிடைப்பதால்., நமது அலைபேசிக்கு வரும் அழைப்புகள் நம்மால் ஏற்கப்படுகிறது. இந்த நேரத்தில் அளவுக்கு அதிகமான ரேசியேஷன் ஆற்றலானது செயல்படுகிறது.

அதிகளவு நாம் அலைபேசியை உபயோகம் செய்தால் உடலில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. இந்த கூற்றானது இன்று வரை நிரூபணம் செய்யப்படவில்லை என்றாலும்., அதிகளவு அலைபேசியை உபயோகம் செய்வதன் மூலமாக அதில் இருந்து வெளியேறும் ரேடியேஷன்., அதிகளவு வெப்பத்தை ஏற்படுத்துவதன் காரணமாக மூளை., இதயம் மற்றும் காது போன்ற உறுப்புக்கள் பாதிக்கப்படுகிறது.

பொதுவாக அனைவரும் என்ன செய்தாலும் அப்படியே அலைபேசியை உபயோகம் செய்து வருகிறோம்., இதற்கு பின்னர் எதோ ஒரு சூழ்நிலையில்., அலைபேசியை வாயில் சிறிது நேரம் வைத்திருக்கிறோம்., பின்னர் அழைப்புகள் வரும் சமயத்தில் காதில் வைத்து பேசிவிட்டு இருக்கிறோம். இதன் காரணமாக கைகளில் இருக்கும் கிருமிகள் அலைபேசிக்கு பரவுகிறது.

அந்த அலைபேசியை நமது கண்ணிற்கு தெரியாமல் ஆட்கொள்ளும் கிருமிகளின் காரணமாக காய்ச்சல்., வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுமட்டுமல்லது உடல் நலத்தை பாதிக்கும் தோல் சம்பந்த பிரச்சனையும் ஏற்படுகிறது. அதிகநேரம் அலைபேசியை தொடர்ந்து உபயோகம் செய்வதால் கண்களில் இருக்கும் தசைகள் வலிக்க துவங்கி நமது கண்களை பாதிக்கிறது.

இந்த சமயத்தில் அலைபேசியை சுமார் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை உபயோகம் செய்து பின்னர் சுமார் 20 நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. அவ்வாறு நாம் கண்களுக்கு ஓய்வு எடுக்காவிட்டால் நமது கண்களானது பாதிக்கும். இதுமட்டுமல்லாது தலைவலி ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. அதிகநேரம் அலைபேசியில் டைப் செய்து வந்தால் தசை நார்களானது பாதிக்கும்.

இதன் காரணமாக கை விரல்களில் இருக்கும் தசை நார்களில் இரத்த ஓட்டமானது தடை செய்யப்பட்டு. தசை நார்கள் கிழிந்து போகும் ஆபத்தும் ஏற்படும். இதனால் விரல்களை அசைக்க முடியாத சூழ்நிலையும் ஏற்படும். இதன் காரணமாக நமது நமது வசதிக்கேற்ப கழுத்து வலி., முதுகு வலி., இடுப்பு வலி மற்றும் கண் தசை நார்கள் வலி., தோல் பட்டை வலியானது ஏற்படும்.