பிரியாணி சாப்பிட்ட கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி.?

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மேல்பாதிரி கிராமத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி இவரது மனைவி உமா வயது 30. இருவருக்கும் திருமணம் ஆகி 4 ஆண்டு ஆகிறது ராகுல் வயது (2) என்ற ஆண் குழந்தை உள்ளது.

உமா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் பகல் உமா பிரியாணி செய்து சாப்பிட்டார். மீதமான பிரியாணியை பிரிட்ஜில் வைத்து அன்று இரவு சாப்பிட்டுள்ளார்.

சிறிது நேரத்தில் உமாவுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது இதையடுத்து வந்தவாசி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் உமாவை சேர்த்தனர்

பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உமா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தினார்

திருமணமாகி 4 ஆண்டே ஆவதால் உமா மரணம் குறித்து செய்யாறு சப்கலெக்டர் அன்னம்மாள் விசாரணை மேகொண்டு வருகிறார் பிரியாணி சாப்பிட்டதால் தான் உமா இறந்தாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.