மளமளவென குவியும் கட்சியினர்… நேரில் விரையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..

சென்னை வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இன்று பிரதமர் மோடி கலந்துகொள்ளும் அதிமுக கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேரில் பார்வையிட்டார்.

சென்னையை அடுத்த வண்டலூரில் நாளை பிற்பகல் சுமார் 4.00 மணியளவில் நடைபெறவிருக்கும் இந்தப் பொதுக்கூட்டத்தில் இந்தியப் பிரதமரும், தேசிய அளவிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவருமான நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரும் இந்தப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், பாஜக மூத்த தலைவர் முரளிதரராவ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.