டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றி சதவீதம் கொண்ட அணி எது?

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதவீத வெற்றிகளை குவித்துள்ள அணிகளின் விபரம் தெரியவந்துள்ளது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள அவுஸ்திரேலிய அணி 816 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் அதன் வெற்றி சதவீதம் 47.05 ஆக உள்ளது.

இரண்டாமிடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்க அணி 37.70 சதவீத வெற்றிகளை 427 போட்டிகளில் விளையாடி பெற்றுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டை கண்டுப்பிடித்த இங்கிலாந்து அணி 1007 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 36.14 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணி 32.68 சதவீதத்துடன் நான்காம் இடத்தில் உள்ளது.

ஐந்தாவது இடத்தில் உள்ள இலங்கை அணி 278 போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில் 31.65 சதவீத வெற்றிகளை பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது.

ஏழாவது இடத்தில் உள்ள இந்திய அணி 531 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 28.06 சதவீத வெற்றிகளை பெற்றுள்ளது.