7.6 கோடி வசூல் சாதனையில் ஜுங்கா!

விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான ஜுங்கா படம் உலகம் முழுவதும் ரூ.7.6 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதிஇ சாயிஷாஇ மடோனா செபாஸ்டியன்ஆகியோர் பலரது நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ஜுங்கா.

ஒரு டான் கஞ்சத்தனமாக இருந்தால், எப்படியிருக்கும் என்பதையும், தனது முன்னோர்கள் இழந்த சொத்துக்களை எப்படி மீட்பது என்பதையும் காமெடி கதையில் வெளிக்காட்டியிருக்கிறார் இயக்குனர் கோகுல்.

அதற்காக விஜய் சேதுபதியை வச்சு நல்லாவே செஞ்சிருக்கிறார். அவருக்கு பக்கா காமெடியில் யோகி பாபு இருந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வெளியான முதல் நாளில் மட்டும் ஜுங்கா ரூ.7.6 கோடி வசூல் செய்துள்ளது என்றும்இ சென்னையில் மட்டும் ரூ.1.9 கோடி வசூல் கொடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.