கீரைக்கட்டு வாங்கினால் தவளை இலவசமா?

இங்கிலாந்து நாட்டில் கார்ன்வால் பகுதியில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் ஷெவ்யான் டால்புட்ட் என்ற பெண்மனி கீரை வாங்கியுள்ளார்.

அப்போது, அந்த கீரைக்கட்டின் உள்ளே தவளை இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண், அதை வீடியோவாக பதிவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதனுடன், #YouGetExtraAtAldi என்ற ஹேஸ்டேக் போட்டு, கீரை வாங்கும் போது தவளை கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் தீயாக பரவ, இதைப் பார்த்த அந்த சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் அந்த பெண்மனியிடம் மண்ணிப்பு கோரியதுடன், மேலும் தங்கள் பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், தவளை எப்படி கீரைக்குள் வந்தது என்பதை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற சம்பவம் நடப்பது முதல் முறை அல்ல, ஏற்கனவே கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு பெண் கீரை வாங்கிய பையில் தவளை இருப்பது கண்டுபிக்கப்ட்டது. இந்த தவளையை இந்த பெண்மணி ஒரு செல்லப்பிள்ளை போல வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.