கமல் வீட்டிற்குள் நுழைந்த இளைஞனால் பரபரப்பு!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டில் இளைஞர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கமல் வீட்டில் நுழைந்தவர் திட்டக்குடியை சேர்ந்த சபரிநாதன் என்பவர் ஆவார்.

அவரை கைது கைது செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கமல்ஹாசன் கட்சி தொங்கி அரசியல்வாதியாகவும் பரிணமிக்க ஆரம்பித்த பிறகு, இங்கு ரசிகர்கள், தொண்டர்கள் என மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதனால் கமல் வீட்டை சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாலிபர் ஒருவர் கமல்ஹாசன் வீட்டு சுவரை ஏறி வீட்டுக்குள் குதித்து பிடிபட்டுள்ளார்.

கமல்ஹாசன் வீட்டில் திருடுவதற்காக அவர் முயற்சி செய்தாரா என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.