முதல் டெஸ்ட் போட்டி டிரா… போதிய வெளிச்சம் இல்லை..

முதல் டெஸ்ட் போட்டி டிரா... போதிய வெளிச்சம் இல்லை..

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தனர். இலங்கை அணியின் அபார பந்து வீச்சின் காரணமாக இந்திய அணியின் 172 ரங்களில் சுருண்டது. இதனைதொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனையடுத்தது விளையாடிய இந்திய அணியின் கேப்டன் கோலியின் அதிரடி சதத்தால் 300 ரன்களை கடந்தது. 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த இலங்கை அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சால் சீரான வேகத்தில் விக்கெட்டுக்களை பறிகொடுத்து வெளியேறினர். இதையடுத்து போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் டிராவில் முடிந்தது.